Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீக்கப்படும் நிர்வாகிகள்… கிழிக்கப்பட்ட போஸ்டர்கள்…. கோவையில் பரபரப்பு…!!

சசிகலாவை வரவேற்கும் வண்ணம் ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு அக்ரஹார சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா அடைக்கப்பட்டார். இவர் கடந்த 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நோயிலிருந்து குணமடைந்த பின் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் ஒன்றியத்தில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரங்கசாமி மற்றும் அ.தி.மு.க தெற்கு ஒன்றிய மகளிர் அணி தலைவி சகுந்தலா ஆகியோர் பெயரில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் அன்னூர் பேருந்து நிலையம், ஓதிமலை ரோடு, கோவை ரோடு, எல்லப்பாளையம் போன்ற அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த போஸ்டர்களை சசிகலாவை தியாகத் தலைவி சின்னம்மா வருக என்று குறிப்பிட்டிருந்தால், அ.தி.மு.க நிர்வாகிகள் அங்கு திரண்டு அந்த போஸ்டரை கிழித்து விட்டனர். இதுகுறித்து அந்த போஸ்டரை ஒட்டிய ரங்கசாமி மற்றும் சகுந்தலா கூறும்போது, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் இருந்து சசிகலா பல தியாகங்களை செய்து உள்ளார் எனவும், அ.தி.மு.க-விற்கு தலைமை ஏற்று கட்சியினரை சசிகலா வழிநடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருவதால் அன்னூரில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |