Categories
கரூர் மாவட்ட செய்திகள்

என் மனைவி கிட்டயா பழகுற…. கல்லூரி மாணவனுக்கு சரமாரி தாக்குதல்…. 3 பேர் கைது….!!

மனைவியுடன் பழகிய கல்லூரி மாணவனை கணவன் நபர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் மாவட்டத்தில் உள்ள செல்லாண்டி பாளையத்தை சார்ந்தவர் தீபன். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ராயனூர் முகாமைச் சார்ந்தவர் குணா. இவரும் தீபனும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அதனால் குணாவின் வீட்டிற்கு தீபன் அடிக்கடி செல்வது வழக்கமான ஒன்றானது. அப்போது குணாவின் மனைவியுடன் தீபனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைக் அறிந்த குணா தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் இருவருக்கும் இடையே உள்ள பழக்கம் தொடர்ந்துள்ளது.

அதனால் குணா தனது நண்பர்களான உதயகுமார், பட்டிபாபு ஆகியோரை அழைத்துக்கொண்டு தீபனை வழிமறித்து காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தீபன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீபன் கொடுத்த புகாரின் பேரில் தாந்தோணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குணா, உதயகுமார் மற்றும் பட்டிபாபு ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |