Categories
உலக செய்திகள்

வெளிநாட்டினருக்கு முக்கிய அறிவிப்பு… மின்னணு முன்பதிவு கட்டாயம்… சுவிட்சர்லாந்து புதிய திட்டம்…!

சுவிட்சர்லாந்திற்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டினர்களும் மின்னணு முன் பதிவு ஆவணம் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் சுவிட்சர்லாந்திற்குள் நுழையும் விமானம், கப்பல், பேருந்து மற்றும் ரயிலில் வரும் வெளிநாட்டினர்கள் மின்னணு முன் பதிவு ஆவணம் பெற்று தான் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் வருபவர்களுக்கு மட்டும் இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா அபாயம் எந்த நாட்டில் அதிகம் இருந்ததோ அந்நாடுகளில் இருந்து வருபவர் மட்டுமே அவர்களது தொடர்பு முகவரி அளித்துச் சென்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது சுவிட்சர்லாந்திற்கு வரும் அனைவரும் தங்களுடைய விவரங்களை தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொற்று பாதித்தவரை விரைவாக அடையாளம் காணுவதுடன் தொற்று சங்கிலியையும் உடைக்க உதவிடும். புதிய நுழைவுப் படிவம் தற்போது இணையத்தில் இல்லை. வரும் பிப்ரவரி 8ஆம் தேதிக்கு முன் இணையத்தில் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |