Categories
சினிமா தமிழ் சினிமா

‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகம்… இயக்குனராகும் ராஜ்கிரண் மகன்… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார் .

தமிழ் திரையுலகில் ‘ராசாவே உன்ன நம்பி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கியவர் ராஜ்கிரண் . இதையடுத்து இவர் ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி இன்று வரை பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார் . இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் அவரது மகன் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாக சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

மகனுடன் ராஜ்கிரண்

அதில் ‘இறை அருளால் இன்று என் மகன் திப்பு சுல்தான் நைனார் முகமது அவர்களின் 20 ஆவது பிறந்தநாள் . இவர் ‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, தற்போது திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார் . இந்தப் படத்தை அவரே இயக்கவுள்ளார் . அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் வேண்டுகிறேன்’ என பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |