Categories
தேசிய செய்திகள்

BIG SHOCKING: நாளை முதல் இதெல்லாம் விலை உயரும்… மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் நாளை இந்த பொருள்களுக்கு எல்லாம் விலை உயர்த்தப்படும் என அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார்.

காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் பெரும் சேதத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விவசாய உட்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரி, பின்வரும் பொருட்களில் உயர்த்தப்படுகிறது. ஆப்பிள் 35%, மைசூர் பருப்பு 20%, கச்சா பாமாயில் 17%, ஆல்கஹால் 100%, வேர்கடலை 50%, பட்டாணி 40%, மூக்கடலை 30%, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் விதிக்கப்படும். இந்த வரி விதிப்பு நாளை (பிப்ரவரி 2) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

Categories

Tech |