கனடாவிலிருந்து வருபவர்களுக்கு சீனாவிற்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவிலிருந்து சீனாவிற்குள் நுழைய தற்கலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, சீன வாழிட உரிமை வைத்திருப்பவர்கள், வெளிநாட்டினர், வேலை காரணமாகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் கனடாவிலிருந்து சீனாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தடை டிப்ளமாட்டிக் மற்றும் சுவிஸ் விசா வைத்திருப்பவர்களை இந்த தடை பாதிக்காது. கனடாவில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 4255 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 19,942 ஆக உயந்துள்ளது. ஆகையால் கனடாவிலிருந்து சீனாவிற்குள் நுழைய தற்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.