Categories
அரசியல் மாநில செய்திகள்

கருவில் இருக்கும் குழந்தைக்கும் இரட்டை இலை பிடிக்கும்… முதல்வர் ஈபிஎஸ் புகழாரம்…!!!

தமிழகத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு கூட இரட்டை இலையை பிடிக்கும் என முதல்வர் பழனிசாமி புகழாரம் பேசியுள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்று அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. இன்னும் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கருவில் இருக்கும் குழந்தைக்கு கூட இரட்டை இலையை பிடிக்கும் என கூறியுள்ளார். ஏழை மக்கள் வாழும் பகுதிகளை தேர்ந்தெடுத்து அம்மா மினி கிளினிக் கொண்டு வந்துள்ளோம் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |