தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளரை வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் எல்லைக்கு உட்பட்ட வாழவல்லான் பகுதியைச் சேர்ந்த முருகவேல் என்பவர் நேற்று குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் திரு பாலு அவரை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி உள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட முருகவேல் மற்றும் இன்னொரு காவலர் சென்ற இருசக்கர வாகனத்தை தனது உரிமையாளருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை கொண்டு பின்னால் இடித்து தள்ளி உள்ளார்.
இதில் படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் பாலு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்றொரு காவலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பி ஓடிய முருகவேலை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தை நடுங்க வைத்துள்ளது.