போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் அதிகமான எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றுவதாக பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இந்த புகாரின் பேரில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் நேற்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த போக்குவரத்து விதிகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி வந்த வாகனங்களையும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாத இருசக்கர வாகனங்களையும் அவர் பறிமுதல் செய்துள்ளார். மேலும் அப்பகுதி வழியாக அதிகளவு மணல் ஏற்றிச் வந்த ஒரு லாரிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.