நடிகர் மஹத் திருமண நாளில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகர் மஹத் அஜித்தின் மங்காத்தா ,விஜய்யின் ஜில்லா, சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர். இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . இவரும் மாடல் அழகி பிராச்சி மிஸ்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் . கடந்த வருடம் பிப்ரவரி 1 ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றது .
இந்நிலையில் இன்று திருமண நாள் கொண்டாடும் மஹத் – பிராச்சி மிஸ்ரா தம்பதி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளனர் . நடிகர் மகத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘நாங்கள் இருவரும் அழகிய குழந்தையால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம் . இந்த வருடம் மே மாதத்தில் குழந்தை பிறக்கும்’ என பதிவிட்டுள்ளார் .இதையடுத்து இந்த அழகிய தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .