Categories
உலக செய்திகள்

மியான்மர் தேர்தலில் முறைக்கேடு நடந்துட்டு… அதான் ஆட்சியை நாங்க கைப்பற்றினோம்… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ராணுவம்…!!

மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக கட்சியின் ஆட்சியை கவிழ்த்து அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக கட்சி பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலை மியான்மர் ராணுவம் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே வந்தது. இந்நிலையில் மியான்மரை ஆளும் பொறுப்பை ஆங் சான் சூகி-யிடமிருந்து  ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து ராணுவ தரப்பில் கூறப்படுவதாவது, ” தற்போது நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்தது. அதனால் தான் மியான்மரை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்” என்று கூறியுள்ளனர்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகள் மியான்மர் ராணுவத்தின் இந்த  கடுமையான நடவடிக்கையை  கண்டித்து சட்டத்தை மதித்து நடக்கும்படி வலியுறுத்தி வருகிறது . இதற்கிடையே  சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “மியான்மர் அரசு இன்று முதல் அந்நாட்டு ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும்  தலைநகரிலிருந்து தொடர்பு  முழுவதும் துண்டிக்கப்பட்டு, அவசர நிலையை ராணுவம் அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஒரு வருடத்திற்கு  மியான்மர் ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும்”  என்றும்  கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |