Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்துவதில் நாங்கள் பாகுபாடு தான் காட்டுகிறோம்”…! உண்மையை ஒப்புக்கொண்ட நியூயார்க் மேயர்…!!

தடுப்பூசி செலுத்துவதில் பாகுபாடு காட்டுவதை நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ ஒப்புக்கொண்டுள்ளார். 

கொரோனா வைரஸால் அதிகளவு பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. தற்போது அமெரிக்கா தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு உள்ள நியூயார்க் நகரில்  தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பாகுபாடு காட்டப்படுவது உண்மைதான் என்பதை நியூயார்க் நகர மேயர் ஒப்புக்கொண்டுள்ளார்.

நியூயார்க்கில் வாழும் கருப்பின, லத்தீன் இன மக்களுக்கு அங்கு வாழும் வெள்ளையின மக்களை விட குறைந்த விகிதத்தில் தடுப்பு செலுத்தப்படுகிறது என்று நியூயார்க் நகரில் மேயர் பில் டி பிளாசியோ ஒப்புக்கொண்டுள்ளார். எனினும்  நியூயார்க் நகர மக்கள் அனைவருக்கும் கண்டிப்பாக தடுப்பூசி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

நியூயார்க் நகரத்தில் உள்ள கருப்பு மற்றும் லத்தீன் இன மக்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிகளவு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் நியூயார்க்கில் இதுவரை 48% வெள்ளையின மக்களுக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால்  24 % கொண்ட கருப்பின மக்களில் 11% மக்களுக்கும்,  15% லத்தீன் அமெரிக்க மக்களுக்கும்  தடுப்பூசி வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

Categories

Tech |