டிராக்டர் பேரணிக்கு பின்னால் சென்ற ஏரளமான விவசாயிகள் காணவில்லை என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் பேரணி சென்றனர். மேலும் சிலர் நடைபயணமாகவும், மோட்டார் சைக்கிளிலும், குதிரைகளும் சென்றனர். அப்போது விவசாயிகள் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்துள்ளனர் . இந்நிலையில் விவசாயிகள் காவல்துறையினரின் தடுப்பை மீறி நுழைந்ததாக காவல்துறையினர் விவசாயிகளின் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதால் விவசாயிகளின் போராட்டம் வன்முறைக் களமாக மாறியது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ,தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. டிராக்டர் பேரணிக்கு பின்னால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை காணவில்லை என்று அதிர்ச்சி தகவலை வெளியாகியுள்ளது. ஆனால் அவர்களை காவல்துறையினர் கைது செய்ததாகவும் தெரியவில்லை. அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று அதிர வைக்கும் கேள்வி ஒன்று எழும்பியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார் விவசாயிகள். மாயமான விவரங்களை சேகரித்து காவல்துறையினரிடம் தெரிவிப்பார்கள் என்று ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மாயமானது பற்றி தகவல் தெரிந்தால் தகவல் அளிக்க செல்போன் நம்பர் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.