கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக தினமும் 2ஜி டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் இன்று முதல் தொடக்கி வைத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து பரப்புரை மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி மக்களை ஆச்சரியப்படுத்தும் திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில் ஆன்லைன் வகுப்பில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு படிக்க உதவி செய்யும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக 2ஜி டேட்டா வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று முதல் இந்த திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.