ஏடிஎம் இயந்திரங்களில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறங்களில் தொடங்கிய நகர்ப்புறங்கள் வரை எல்லா பகுதிகளிலும் ஏடிஎம் வசதி என்பது அத்தியாவசிய தேவையாக ஒன்றாக மாறிவிட்டது. மேலும் கொரோனா காலத்தில் மக்களின் அவசரமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ஏடிஎம்கள் முக்கிய பங்கு வகித்து வந்தன. இதையடுத்து ஏடிஎம்மில் பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கான வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதிக்கு உங்களுடைய செல்போனில் எஸ்பிஐ வங்கியின் யோனா செயலி இருந்தால் மட்டுமே போதும்.
எஸ்பிஐ நெட் பேங்கிங் ID, password பயன்படுத்தி உள்ளே நுழைய வேண்டும். அதில் 6 இலக்க MPIN வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது Yona cash என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஏடிஎம் பிரிவில் உங்களுக்கு தேவையான பணத்தை பதிவுசெய்யவும் . இதில் குறைந்தது ரூ.10,000 வரை பணத்தை எடுக்கலாம்.
இதையடுத்து Transaction number வரும். இந்த எண்ணையும், PIN நம்பரையும் பயன்படுத்தி Yono cash point ஏடிஎம்களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் மொபைலுக்கு வரும் transaction number நான்கு மணி நேரம் வரை செல்லுபடியாகும். இதன் மூலம் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயனடைய கூடும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.