Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராதிகா வெளியிட்ட சோகமான பதிவு … ‘கிழக்கே போகும் ரயில்’ பட ஒளிப்பதிவாளர் மரணம்…!!!

நடிகை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் சோகத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ராதிகா திரைப்படங்களில் நடித்து வருவதோடு சீரியல்களிலும் நடித்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‌. தற்போது நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து அரசியல் பணிகளை கவனித்து வருகிறார் ‌ . இந்நிலையில் நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் சோகத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தன்னுடைய முதல் படமான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் ஒளிப்பதிவாளர் நிவாஸ் இன்று காலமானதாக தெரிவித்துள்ளார் . ஒளிப்பதிவாளர் நிவாஸ் 16 வயதினிலே, கோழி கூவுது, எங்க ஊரு மாப்பிள்ளை, சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் ,நிறம் மாறாத பூக்கள் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார் . இவர் தெலுங்கு , ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார் . மேலும் இவர் எனக்காக காத்திரு , நிழல் தேடும் நெஞ்சங்கள், கல்லுக்குள் ஈரம் ,செவ்வந்தி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |