Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

திரையுலகில் ஏழு ஆண்டுகள் நிறைவு… புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்த நிக்கி கல்ராணி…!!!

திரையுலகில் ஏழு ஆண்டுகள் நிறைவானதையொட்டி நிக்கி கல்ராணி புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளார் .

மலையாள திரையுலகில் நடிகை நிக்கி கல்ராணி கடந்த 2014 ஆம் ஆண்டு  வெளியான ‘1983’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடித்திருந்தார் . இதையடுத்து நடிகை நிக்கி கல்ராணி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் .

நிக்கி கல்ராணி

இதைத்தொடர்ந்து யாகாவராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2, கடவுள் இருக்கான் குமாரு, மரகதநாணயம், நெருப்புடா, கலகலப்பு 2, மொட்ட சிவா கெட்ட சிவா ,ஹர ஹர மஹாதேவகி, சார்லி சாப்ளின் 2, பக்கா ,தேவ் ,கீ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . தற்போது இவர் நடிப்பில் ‘ராஜ வம்சம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி திரையுலகில் ஏழு ஆண்டுகள் நிறைவானதையொட்டி புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளார்.

Categories

Tech |