பாலியல் குற்றத்திற்கு சர்ச்சையான தீர்ப்பு வழங்கி சிக்கிய நீதிபதி மீண்டும் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இந்தியாவில் தற்போது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுகிறது. மேலும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசு தக்க தண்டனைகளையும் கொடுத்து வருகிறது. இந்நிலையில் வரதட்சணை துன்புறுத்தலால் மும்பையில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதன் மேல் முறையீட்டு வழக்கில் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என தீர்ப்பளித்து குற்றவாளியை விடுதலை செய்துள்ளார் மும்பை நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பாவதி கணேதிவாலா.
இவர் ஏற்கனவே ஆடையோடு பெண் மார்பை தொட்டால், சிறுமியின் கையைப் பிடித்திருந்தும், பேண்ட் ஜிப் திறந்திருந்தால் பாலியல் அத்துமீறல் ஆகாது என சர்ச்சையை ஏற்படுத்திய தீர்ப்புகளை அழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.