Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு மில்லியன் ஃபாலோயர்கள்… குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு…!!!

இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பின் தொடர்பாளர்களை பெற்றுள்ள குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது . தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது . இந்த சீசனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை ஈர்த்தவர்  அஸ்வின் குமார். இந்நிலையில் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பின் தொடர்பாளர்களை பெற்றுள்ளார் .

 

Ashwin Kumar (Cook With Comali 2) Wiki, Biography, Age, Movies, TV Shows,  Images - News Bugz

இதுகுறித்து மகிழ்ச்சியடைந்த அஸ்வின் ‘ஒரு மில்லியன் இதயங்கள் ,இது எனக்கு எளிதானது அல்ல . இதன் மதிப்பு எனக்கு தெரியும் . உங்களை மகிழ்விக்க  சிறந்ததை தருவேன் . உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் . இதையடுத்து அஸ்வினுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

Categories

Tech |