Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்ன காரணமா இருக்கும்… போலீசாரின் விபரீத முடிவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பணியிட மாற்றம் பெற்ற மூன்று நாட்களிலேயே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் தாலுகாவில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்துள்ளார். இவர் முகலிவாக்கம் பகுதியில் தனது பெற்றோருடன் ஏ.ஜி.எஸ் காலனியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அதோடு அவரது உறவினர்கள் பலமுறை அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டும் அவர் எடுக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர்.

அப்போது உறவினர்கள் ஆல்பர்ட் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாங்காடு போலீசார் உடலை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் டெல்லியில் எட்டாவது சிறப்பு காவல் படையில் பணிபுரிந்த ஆல்பர்ட், சென்னை ஆவடியில் உள்ள ஐந்தாவது சிறப்பு காவல் படைக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் பணியிடமாற்றம் பெற்றுள்ளார்.

இவரது பெற்றோர் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லாத காரணத்தால் ஆவடியில் உள்ள அதிகாரி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, ஆல்பர்ட் பணிக்கு வரவில்லை என்று கூறியதால் உயர் அதிகாரியை பார்த்து விட்டு மீண்டும் பணிக்கு வருமாறு அந்த அதிகாரி கூறியுள்ளார். எனவே இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |