மனைவி இறந்த விரக்தியில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி சாலையில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு குரு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முத்து பிரியா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் குரு செல்வி பலருடன் பேசி வருவதாக கூறி சந்தேகத்தில் மாரிமுத்து தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த குரு செல்வி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
அதன் பின் மன உளைச்சலில் இருந்த மாரிமுத்து மின்விசிறியில் தனது மனைவி தூக்கு போட்ட அதே செயல்களையே தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.