Categories
தேசிய செய்திகள்

SHOCKING: பெட்ரோல், டீசல் விலை உயருகிறது…. வெளியான தகவல்…!!

உள்கட்டுமான மேம்பாட்டுக்கு செஸ் வரி (AIDC) விதிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல் டீசல் விலை உயரும்.

2021 – 2022 பட்ஜெட் தாக்கல் இன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது உரையாற்றிய நிர்மலா சீதாராமன் திருக்குறளை மேற்கோள்காட்டி ஆரம்பித்து பலரது பாராட்டையும் பெற்றார். இதையடுத்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் விவசாயம் உள்கட்டுமான மேம்பாட்டுக்கு செஸ் வரி (AIDC) விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூபாய் 2.5 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூபாய் 4 செஸ் வரி விதிக்கப்படும். மேலும் அன்பிரண்டட் பெட்ரோலுக்கு அடிப்படை கலால் வரி லிட்டருக்கு ரூபாய் 1.40 டீசலுக்கு ரூபாய் 1.80 அதிகரிக்கும். இது தவிர சிறப்பு கூடுதல் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |