பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாய உள்கட்டுமான மேம்பாட்டுச் செஸ் வரி ஆல்ஹகால் மீது 100% விதிக்கப்பட்டுள்ளது.
2021- 2022 மத்திய பட்ஜெட் பாரளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து பல்வேறு திட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களும் சிறப்பு வாய்ந்ததாக அமல்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாய உள்கட்டுமான மேம்பாட்டுச் செஸ் வரி ஆல்ஹகால் மீது 100% விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிராந்தி, விஸ்கி, போர்பான், ஸ்காட்ச் உள்ளிட்ட மதுபானங்கள் மீது இந்த வரி விதிக்கப்படும்.
இது தவிர நொதித்தல் முறையில் தயாரிக்கப்படும் நான்-ஆல்ஹகாலிக் பானங்கள் மீதும் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.செஸ் வரி விதிப்பு நுகர்வோரை பாதிக்காது என்று அரசு சொன்னாலும், மதுபானங்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இது குடிமகன்கள் இடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.