Categories
தேசிய செய்திகள்

ஆதரவற்ற 10 முதியோரை… “சாலையில் தூக்கி வீசிய பணியாளர்கள்”… வைரலான வீடியோ..!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 10 ஆதரவற்ற முதியவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது .

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆதரவற்றோர், சுற்றித் திரிபவர்களை அந்த ஊர் மாநகராட்சி ஊழியர்கள் லாரியில் ஏற்றி அரசு காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிலரை மனிதாபிமானமற்ற முறையில் இறக்கி விட்டு சென்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரது கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மாவட்ட நிர்வாகத்திடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதுகுறித்து நகராட்சி ஆணையர்கள் பிரதீபா பாட்டில் கூறுகையில் குளிர் காலத்தில் இது போன்ற ஆதரவில்லாமல் சுற்றி திரிபவர்களை மாநகராட்சி பணியாளர்கள் அரசு காப்பகத்திற்கு கொண்டு செல்வார்கள். சிலர் செல்ல தயாராக இருப்பர். ஆனால், அவர்களில் சிலர் வேறு இடங்களுக்கு சென்றுவிடுவர்’ என்றார்.

Categories

Tech |