இந்தியாவிலேயே முதல் முறையாக ஆழ்கடலில் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியின் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சின்னத்துரை மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்வேதா ஆகியோருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில், இருவரும் தங்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் செய்ய விரும்பி உள்ளனர். இதனை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள ஆழ்கடலில் நீந்தும் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இவர்கள் காலை மணமக்கள் அலங்காரத்துடன் ஆக்சிஜன் சிலிண்டர்களை பொருத்திக்கொண்டு ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்டனர். இந்தியாவில் பாரம்பரிய உடை அணிந்து ஆழ்கடலுக்குள் திருமணம் செய்வது இதுவே முதன் முறையாகும். இவர்களது திருமண வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.