ஒரு மனிதன் ஒரு நாளைக்கு தினமும் ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். நாம் தூங்கும் போது தான் நம் உடலிலுள்ள உறுப்புகள் புத்துணர்வைத் தரும்.
இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் வேலை பணம் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் பலர் தூக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஆழ்ந்து உறங்குவதால் உடலும் மனமும் புத்துணர்வு பெறுகிறது. தூக்கத்தில் உடல் மட்டுமல்ல மனமும் இளைப்பாறுகிறது.
இதனால் கவனம் குறிப்பு திறன் மேம்படுகிறது.
நினைவாற்றல் சிறப்பாக செயல்படுகிறது.
படைப்பாற்றல் திறன் வளர்கிறது.
சிறப்பாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கிறது.
எதிர்மறை விஷயங்கள் குறைகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.