Categories
மாநில செய்திகள்

தேர்தல் நேரம்…! முதல் தலைமுறை வாக்கு… ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி… மாஸான திட்டம் தொடக்கம் …!!

கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  நேற்று தொடங்கி வைத்தார். 

கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் நலன் கருதி ஏப்ரல் வரை   தினம் தோறும் 2ஜிபி டேட்டா  வழங்கப்படும் என்று ஜனவரி 11ஆம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன் படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் சுயநிதி கல்லூரிகளும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்பட இருந்தது.

இதனிடையே இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். தமிழக அரசின் இந்த திட்டம் தேர்தலுக்கானது, முதல் தலைமுறை வாக்குகளை பெறுவதற்கானது என அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |