Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 60 வகையான பாரம்பரிய உணவு…. அசர வைக்கும் திறமை… வியக்க வைத்த சிறுமி…!!

40 நிமிடங்களில் 60 வகையான பாரம்பரிய உணவு வகைகளை செய்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சாதனை படைத்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்பட்டி பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரித்திகா மற்றும் தர்ஷினி என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் பல வகையான மூலிகை செடிகளை தங்கள் வீடுகளில் வளர்ப்பதுடன் அந்த மூலிகைச் செடி மற்றும் பாரம்பரியம் மிக்க உணவு வகைகளை தான் பெரும்பாலான நேரங்களில் சமைக்கின்றனர்.

இந்நிலையில் பாரம்பரிய உணவு வகைகளின் மீது ஆர்வம் கொண்ட தர்ஷினி நவீன உலகில் மக்கள் மறந்து வரும் பாரம்பரிய உணவு வகைகளை வழக்கமான உணவாக கொண்டு வருவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உலக சாதனை நிகழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பாரம்பரியமிக்க 55 உணவு வகைகளை ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்க திட்டமிட்டு இருந்தார். இதற்காக பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் அவரது வீட்டில் உலக சாதனைக்கான முயற்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கவுனி அரிசியில் புட்டு, கம்மங்கூழ், சர்க்கரை துளசியில் லெசி, மாப்பிள்ளை சம்பா ஸ்வீட், தினை தோசை, வெற்றிலை தோசை என மொத்தம் 60 வகையான பாரம்பரியமிக்க உணவு வகைகளை சுமார் 40 நிமிடங்கள் தர்ஷினி செய்து அசத்தியுள்ளார். அதன் பின் தர்சினிக்கு உலக சாதனைக்கான சான்று மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. அவரின் இந்த திறமையை பார்த்து அனைவரும் வியந்து விட்டனர்.

இதுகுறித்து அவரது தாய் புவனேஸ்வரி கூறும்போது, தங்களது வீட்டு பல்வேறு வகையான பாரம்பரிய உணவுகளை வளர்ப்பதால் அதனையே சமைத்து சாப்பிடுவதாகவும், பெரும்பாலான மக்கள் தற்போதைய காலகட்டத்தில் பாரம்பரிய உணவு வகைகளை கைவிட்ட நிலையில் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் உலக சாதனை முயற்சிக்காக தன் மகள் விருப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |