மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் பூலியப்பன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் வீராணம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ஊத்துமலை விலக்கு அருகே இவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பூலியப்பன் பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வீரகேரளம்புதூர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.