Categories
உலக செய்திகள்

“ஊரடங்கு விதிகளை மீறாதீங்க”… எச்சரித்தும் பயன் இல்லை…! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்…!!

பிரிட்டனில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது பிரிட்டனில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பிரிட்டன் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி, லண்டன் மற்றும் கிழக்கு இங்கிலாந்து போன்ற இடங்களில்  கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் தேவை இன்றி பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று லண்டனிலிருந்து Gloucestershire-ன்  Cotswold மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அத்தியாவசியமற்ற முறையில் பயணம் மேற்கொண்டதாக நபர் ஒருவருக்கு 200 டாலர் அபராதத்தை காவல்துறையினர் விதித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்ட பதிவில்  300 மைல் தூரத்திற்கு எதற்காக பயணம் செய்தீர்கள் என்று கேட்டால் லண்டனில் ஷாப்பிங் செய்வது மிகவும் கடினம் என்று தேவையற்ற காரணத்தை அவர் கூறியுள்ளார்.இதனால் விதிமுறைகளை மீறியதாக கூறி அவருக்கு 200 பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.  பின்னர் 2மணி நேரம் கழித்து அதே மாவட்டத்திற்கு பயணம் செய்த பல்வேறு நபர்களுக்கு காவல்துறையினர் தொடர்ந்து அபராதம் விதித்துள்ளனர்.

காவல்துறையினர் மீண்டும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதில், “நாம் தற்போது ஊரடங்கில் இருக்கிறோம், இது முன்னர் இருந்த பிரிட்டன் இல்லை” என்று கூறியுள்ளனர். தொடக்கத்திலிருந்தே கொரோனா பரவலை தடுக்கும் நடைமுறையில் உள்ள விதிகளை அமல்படுத்துவதற்கு தேவையான அனைத்து அதிகாரங்களும் காவல்துறையினருக்கு பிரிட்டன் அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |