Categories
அரசியல் மாநில செய்திகள்

சித்தப்பா … சித்தப்பானு சொன்னீங்க…! அதிமுகல சேர வேண்டியதானே… அமைச்சரின் சென்டிமென்ட் …!!

தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சியினரும் எம்ஜிஆரை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்று நினைப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி பகுதியில் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள மழைநீர் கால்வாய் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளரை சந்தித்த அவர், எம்ஜிஆரை திமுக தலைவர் கருணாநிதி இழிவாக பேசிய பொழுது எம்ஜிஆர் சித்தப்பா என ஸ்டாலினுக்கு தெரியவில்லையா ? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் சித்தப்பாவை தூக்கி வெளியே போடுற, இப்படி செய்யக்கூடாது அப்படின்னு அவங்க அப்பாகிட்ட ஸ்டாலின் சொல்லி இருக்கலாம் அல்லவா? அடம் பிடித்து இருக்கலாம். பெரியப்பா கட்சி ஆரம்பித்தார் அல்லவா அப்போது ஸ்டாலின் வந்தாரா ?

1984ல் புரட்சித்தலைவர் உயிரோட இல்ல. என் ஆருயிர் நண்பன். அரசியலில் சிலர் எங்களை சதித் திட்டம் எங்களை பிரித்து விட்டார்கள். நானும், எம்ஜிஆரும் ஆருயிர் நண்பர்கள். ஒரே தட்டில் சாப்பிட்டுள்ளோம். அவர் இன்னைக்கு இல்ல. ஆனால் அவரைச் சொல்லி இவங்க கட்சி நடத்த பாக்குறாங்க, ஆட்சி வர பாக்குறாங்க. என் நண்பன் இடத்தில் என்னை தேர்ந்தெடுங்கள்.

நான் வெற்றிபெற்றால் எம்ஜிஆர் கிட்ட இந்த ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன். அவரை முதலமைச்சர் ஆக்குகிறேன் என்று சொன்னார் கலைஞர். ஆனால் அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என்று நல்லா தெரிகிறது என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்தார்.

Categories

Tech |