தமிழகத்தின் துணைத் தலைவர் பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் முழுவதும் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சி நிறை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரின் வருகையை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்று அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அதிமுகவினர் சசிகலாவை வரவேற்று போஸ்டர்களை ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், “எங்கள் குலசாமியே, தமிழக தலையெழுத்தை மாற்ற தீயாக வரும் தியாகத் தலைவி சின்னம்மா” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது போன்ற போஸ்டர்கள் தேனி மாவட்டம் முழுவதுமே ஒட்டப்பட்டி இருப்பதாக கூறப்படுகிறது.