இறந்த தந்தையின் உருவத்தை தங்கையின் திருமணத்திற்கு கொண்டு வந்த சகோதரியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் வசிப்பவர் செல்வம். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். முதல் இரண்டு மகள்களுக்கும் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்த நிலையில் எதிர்பாராத விதமாக கடந்த 2012ஆம் வருடம் செல்வம் உயிரிழந்துள்ளார். இதையடுத்து தற்போது அவருடைய செல்ல மகளான லட்சுமி பிரபா திருமணத்திற்கு செல்வம் இல்லாமல் இருப்பது அவருடைய குடும்பத்தினருக்கும், அவருடைய செல்ல மகள் லட்சுமி பிரபாவுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து லண்டனில் பணிபுரியும் லட்சுமி பிரபாவின் மூத்த சகோதரி புவனேஸ்வரி தந்தையின் முழு உருவச் சிலையை தனியார் நிறுவனத்தில் 6 லட்சம் செலவில் வடிவமைக்க கொடுத்துள்ளார். இதையடுத்து சிலிக்கான் மற்றும் ரப்பரை கொண்டு செல்வத்தின் உடல் தயார் செய்யப்பட்டு லட்சுமி பிரபாவின் திருமணத்தன்று வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிருடன் இல்லாத தன்னுடைய தந்தை செல்வத்தின் சிலை முன்பு மணமக்கள் மாலை மாற்றிக் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். அப்போது லட்சுமி பிரபா தன்னுடைய தந்தையின் சிலையை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தது காண்போரை கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.