ஸ்டாலின் எம்ஜிஆரை பெரியப்பா சித்தப்பா என்று கூறினாலும் எடப்பாடி தான் முதல்வர் என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்கு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, “தேர்தல் நெருங்குவதால் எம்ஜிஆரை பெரியப்பா, சித்தப்பா என்று ஸ்டாலின் கூறுவதாகவும், பெரியப்பா எம்ஜிஆர் தான் தன்னை அரசியலில் பணியாற்ற சொல்லியதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முரசொலியில் எம்ஜிஆரை வாங்காத கப்பலை வாங்கியதாக இழிவாக எழுதியவர்கள் திமுகவினர். எம்ஜிஆரை தலைவர் கலைஞர் இழிவாக பேசிய போது அவர் சித்தப்பா என்று அவருக்கு தெரியவில்லையா? அவரை கட்சியை விட்டு நீக்கும்போது கலைஞரிடம் சித்தப்பாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஸ்டாலின் அடம்பிடித்து இருக்கலாம். ஏன்? அவ்வாறு செய்யாமல் இப்போது தேர்தல் வருவதால் பெரியப்பா, சித்தப்பா என்று கூறுகிறார். பெரியப்பா, சித்தப்பா என்று ஸ்டாலின் எம்ஜிஆரை கூறினாலும் முதல்வர் எடப்பாடி தான் முதல்வர் என மக்கள் தீர்மானம் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.