தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தற்போது வரை ரூ.7,700 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி இவர்களுக்கான மாத சம்பளம் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இவர்களின் வருகைப் பதிவேட்டின் அடிபடையில் தலைமை ஆசிரியர் மூலமாக இந்த சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.