Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக பிடிவாதத்தின் பிரதிபலிப்பு… ஸ்டாலின் கடும் விமர்சனம்…!!!

தமிழக விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராகவே நடப்போம் என்ற பாஜகவின் பிடிவாதத்தின் பிரதிபலிப்பு என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சி நிறை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரின் வருகையை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்று அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சென்னை-சேலம் பசுமை திட்டத்தை நிறைவேற்றுவோம் என்பது தமிழக விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராகவே நடப்போம் என்று பாஜகவின் பிடிவாதத்தின் பிரதிபலிப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கொரோனாவால் வாழ்வாதாரத்தை இறந்தவர்களுக்கு நேரடியாக பண உதவி வழங்கி அறிவிப்பு எதுவும் இல்லை. இந்திக்கு மொழிபெயர்ப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |