Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்னால பணம் தர முடியாது…. தந்தை எடுத்த முடிவு…. மகன் செய்த செயல்….!!

தந்தை பணம் கொடுக்க மறுத்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி கிராமத்தை சார்ந்தவர் பொன்னையா. இவருடைய மகன் அருண்குமார் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அருண் தனது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். கடந்த 29ஆம் தேதி இரவு தனது தந்தையிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளார். ஆனால் அருண் குமாரின் தந்தை பணம் கொடுக்க மறுத்து விட்டதால் அவர் தனது அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொன்னையா பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |