நடிகர் சூர்யா தனது நடிப்பை தானே கடுமையாக விமர்சனம் செய்வதாக கூறியுள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம் . இந்நிலையில் நடிகர் சூர்யா தனது சினிமா வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ளார் . அதில் ‘நான் இருபது வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருக்கிறேன் . இருப்பினும் இன்னும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் இருக்கிறது . சில நேரம் நான் நடித்த படங்களை நானே பார்ப்பதில்லை . திரைக்கு வந்த பிறகும் 100 நாட்களுக்குப் பின் காத்திருந்து பார்த்த படங்களும் இருக்கிறது . நான் நடித்த சில குறிப்பிட்ட காட்சிகளை பார்க்காமல் தவிர்த்திருக்கிறேன் .
ஆனாலும் நான் படங்களில் செய்துள்ள தவறை மக்கள் மன்னித்து ரசிப்பார்கள் என நினைப்பேன் . எனது மனைவி மற்றும் சகோதரரும் நடிக்கிறார்கள் . அவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. அவர்கள் நடித்த காட்சிகளை விரும்பி பார்ப்பார்கள் . ஆனால் நான் அப்படி இல்லை . நானே எனது நடிப்பை கடுமையாக விமர்சனம் செய்வேன். நான் சரியாக நடிக்கவில்லை, இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம் என கூறிக் கொள்வேன். சினிமா துறைக்கு வந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆன பிறகும் இன்னும் நான் சிறப்பாக நடித்திருக்கலாம் என்று தான் எண்ணம் தோன்றுகிறது’ என கூறியுள்ளார் .