Categories
சினிமா தமிழ் சினிமா

‘டாக்டர்’ அப்டேட்… டுவிட்டரில் வெளியிட்ட சிவகார்த்திகேயன்…!!!

‘டாக்டர்’ படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ . இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் வினை, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் .

இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரெடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது . டாக்டர் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை  நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . அதில் ‘டாக்டர்’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு  செய்துவிட்டதாகவும் ,இயக்குனர் நெல்சன் மற்றும் படக்குழுவினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் .

Categories

Tech |