Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. 50% ரசிகர்களுக்கு அனுமதி – மத்திய அரசு அதிரடி…!!

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண 50% ரசிகர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கிற இந்திய அணி வீரர்கள் நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் தொடரை விளையாட இருக்கிறது.  முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இரண்டு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கொரோன பரவல் காரணமாக இந்த போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது 50% ரசிகர்களுக்கு  மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் போட்டி நடைபெறும் நாட்களில்  தினந்தோறும் 19,000 ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். இதையடுத்து இரு நாட்டு வீரர்களும் இன்று முதல் தீவிர வலைப்பயிற்சியை தொடங்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |