Categories
தேசிய செய்திகள்

இனி சிலிண்டர் புக் செய்வது ரொம்ப ஈஸி…. “ஒரே ஒரு மிஸ்ட் கால் போதும்”… இன்று முதல் அமல்..!!

இண்டேன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை புக் செய்வதற்கு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் நேற்று முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டரை எளிதாக முன்பதிவு செய்யும் வகையில் பல முறைகளை அறிமுகம் செய்தது. அதன்படி நாடு முழுவதும் ஒரே எண் கொண்டுவரப்பட்டது. வாட்ஸ்அப் மூலம் புக் செய்யும் வசதியும் கொண்டுவரப்பட்டது. இதே போன்று தற்போது மிஸ்டு கால் மூலம் சிலிண்டர் புக் செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் எந்த பகுதியில் இருந்தும் 8454955555 எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும், சிலிண்டர் உங்கள் வீடு தேடி வரும். நீங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து மட்டுமே மிஸ்டுகால் கொடுக்க வேண்டும். இந்த வசதி கடந்த மாதம் புவனேஸ்வர் மாநிலத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது நாடு முழுவதும் இது கொண்டு வரப்பட்டுள்ளது.

Categories

Tech |