Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிக்கியவை மொத்தம் 2 1/2 டன்… போலீசாரின் அதிரடி சோதனை… கடத்தல் குறித்து தீவிர விசாரணை…!!

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட ஒரு நபர் மகாராஜபுரம் அம்பேத்கர் தெருவில் 57 மூட்டை அதாவது இரண்டரை டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உள்ளனர். இதனையடுத்து இரண்டரை டன் அளவுள்ள ரேஷன் அரிசி அங்கு பதுக்கி வைத்து இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அதன் பின் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வத்திராயிருப்பு காவல் நிலையத்திற்கு அதனை கொண்டு வந்துவிட்டனர். இதனை தொடர்ந்து வத்திராயிருப்பு போலீசார் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கொடுமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இவற்றை பதுக்கி வைத்த நபர் யார் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |