Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆசையாக பேரனுடன் சென்றவர்… வழியிலேயே வந்த வினை… கதறும் குடும்பத்தினர்…!!

சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசா கவுண்டன் ஊரில் ராஜகோபால் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு கிரிதரன் என்ற பேரன் இருக்கின்றான். இவர் தனது பேரனான கிரிதரனை பின்னால் அமர வைத்துக் கொண்டு சைக்கிளில் கடைக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் மரூர்பட்டி ராசா கவுண்டனூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இவரின் சைக்கிள் பின்னால் வந்த கிரேன் ஒன்று இவரின் சைக்கிள் மீது மோதி விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜகோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு படுகாயமடைந்த கிரிதரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் சங்கர் என்ற டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |