Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக…. வரும் 6ம் தேதி…. நாடு முழுவதும் முற்றுகை போராட்டம்…!!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் முக்கிய சாலைகளில் வரும் 6ஆம் தேதி போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

சக்கா ஜாம் என்ற இப்போராட்டத்திற்கு பெயரிட்டுள்ளனர். 3 மணிநேரம்  தலைநகரை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து முடக்க போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

70வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்தும் விவசாய சங்கத்தின் கூட்டமைப்பு இவ்வாறு முடிவு செய்துள்ளது. இது குறித்து விவசாய சங்க நிர்வாகிகள் கூறியதாவது மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு உரிய ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளனர். பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லி எல்லைகளாக சிங்கு, காசிப்பூர், தித்ரி  மற்றும் ஹரியானாவில் உள்ள சில மாவட்டங்களில் சமூக வலைத்தள சேவைகள் நேற்று முடக்கப்பட்டன.

சட்டவிரோதமாக யாரையும் அடைத்து வைக்க வில்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வரும் 6-ஆம் தேதி நடத்தப்படும் போராட்டத்தின் டெல்லியில் முக்கிய சாலைகளில் பதற்றமான சூழ்நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்யப்பட்டு வருகின்றன.

Categories

Tech |