Categories
தேசிய செய்திகள்

“அரசின் சேவைகளை பெற தொலைபேசி எண்”… ஆளுநர் அறிவிப்பு..!!

சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் முக்கிய அம்சங்கள் கூறப்பட்டது. 

கொரோனா காலகட்டத்திலும் ரூ.60,674 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடக எவ்வித அணைகளையும் கட்டக்கூடாது என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பெரியாறு சூடறடிறடன குறுக்கே கேரளா அணை கட்டுவதை அனுமதிக்க கூடாது.

காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு முதல்கட்டமாக துவங்கப்படும். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் முதற்கட்ட பணிகள் மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவுபெறும். நாட்டிலேயே அதிகம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டது தமிழகம் தான்

தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளதால் சமூகநீதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்கும்.

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டால் நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 435பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் 2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்குவது தொலைநோக்கு பார்வையுடனான திட்டம்.

பயிர் காப்பீடு திட்டத்திற்கான கூடுதல் செலவை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் அவர்களின் உரிமையை தமிழக அரசு உறுதி செய்யும்.

தமிழக மக்கள் இந்தியாவன் எந்த பகுதியிலும் ரேசன் கடைகளில் பொருட்களை பெற ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் உதவும். தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி எனும் முதலமைச்சரின் அறிவிப்பிற்கு பாராட்டு

முதலமைச்சரின் உதவி மையம் எனும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும். மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே 1100 என்ற எண்ணிற்கு அழைத்து அரசின் சேவைகளை பெறலாம். அரசின் சேவைகளை பெற தொலைபேசி எண் 1100. கொரோனா நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு இதுவரை ரூ.13208 கோடி செலவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |