சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் போது திமுக எம்எல்ஏக்கள் கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் நடப்பாண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இது முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றியுள்ளார். அப்போது ஆளுநரை பேசவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு அவர் என்னுடைய உரைக்கு எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? என்னிடம் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் என்று கேட்டுள்ளார்.
இது கடைசியாக நடக்கக்கூடிய கூட்டத்தொடர் என்பதால் எதிர் கட்சியினர் முழு ஒத்துழைப்பு கொடுங்கள். எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம். இப்படி சத்தம் போட வேண்டாம். அப்படி எதிர்ப்பு தெரிவித்தால் வெளிநடப்பு செய்யுங்கள். பின்னர் 5 நிமிடம் கழித்து வந்து கலந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர். இதன் பின்னர் ஆளுநர் தனது உரையை தொடங்கியுள்ளார். இதனால் சட்டமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.