Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நோட்டமிட்ட திருடன்… யாருமில்லாத நேரத்தில் கைவரிசை… மோப்ப நாயுடன் போலீஸ் ஆய்வு…!!

ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து பணத்தையும் நகையும் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் இருக்கும் செங்குந்தபுரம் கிராமத்தில் கொளஞ்சியப்பன்-ஹேமலதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சபரீஸ்வரன் என்ற ஒரு மகன் உள்ளான். ஹேமலதா அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹேமலதா கொளஞ்சியப்பன் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சாவூருக்கு சென்றுள்ளனர். சபரீஸ்வரன் தனது சித்தப்பா வீட்டிற்கு சென்று இரவில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை உறவினர் ஒருவர் கொளஞ்சியப்பன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உடனே சபரீஸ்வரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சபரீஸ்வரன் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது இரண்டு கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதும் 3 பீரோவின் கதவு உடைந்திருந்தது. மேலும் ஒரு பீரோவில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணமும் 25 பவுன் நகையும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அந்த மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்காமல் தறி கொட்டகையில் சென்று படுத்துக்கொண்டுள்ளது. மேலும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |