பிரான்சில் மெழுகுவர்த்தி மற்றும் தோசை போன்ற உணவு பொருட்களை வைத்து நம்பிக்கை கொண்ட ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐந்தாம் நூற்றாண்டில்கெலாசியஸ் எனும் போப்பாண்டவர் ரோமுக்கு வரும் ஏழை புனிதப் பயணிகளுக்கு உதவுவதற்காக மெழுகுவர்த்தி பண்டிகையின்போது தோசை போல் காணப்படும் கிரேப்ஸ் எனும் உணவை அன்னதானம் செய்து வந்தார். மெழுகுவர்த்தி பண்டிகையால் பல மூட நம்பிக்கைகளும் வளர்ந்து வருகிறது.
அதனடிப்படையில் தேவாலயத்தில் இருந்து மெழுகுவர்த்தியை யார் வீட்டிற்கு அணையாது எடுத்து செல்கிறார்களோ அவர்கள் அந்த ஆண்டு இறக்க மாட்டார்கள் என்று அங்கு வசிக்கும் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். பிரான்சில் இன்னொரு பகுதியில் வேறு ஒரு மூடநம்பிக்கை வளர்ந்து வருகிறது.
அது என்னவென்றால், வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் மெழுகுவர்த்தியில் ஒரு பக்கமாகவே மெழுகு வழிந்தால் அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் இறந்து விடுவார் என்று நம்புகின்றனர். மேலும் இந்த பண்டிகையின்போது தோசை போன்று காணப்படும் கிரேப்ஸ் செய்யும் உணவு தயாரிக்கப்படுகிறது. அதிலும் அதிக நம்பிக்கைகள் உள்ளது. மேலும் மெழுகுவர்த்தி பண்டிகையின் போது மழை பொழிந்தாள் அடுத்த 40 நாட்களுக்கு மழை பொழியும் என்ற ஐதீகமும் உள்ளது.