நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இயக்குனர் ஓம் ராவத் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் .
பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ் . இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘சஹோ’ படத்தில் நடித்திருந்தார் . இதன்பின் நடிகர் பிரபாஸ் இயக்குனர் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் நடிகர் பிரபாஸ் நாக் அஸ்வின் இயக்கும் படத்திலும், கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்திலும் நடிக்க இருக்கிறார் .
#Adipurush aarambh. #Prabhas #SaifAliKhan #BhushanKumar @vfxwaala @rajeshnair06 @TSeries @retrophiles1 #TSeries pic.twitter.com/LbHvEFhmFF
— Om Raut (@omraut) February 2, 2021
தற்போது நடிகர் பிரபாஸ் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் . ராமாயணத் தொடரை மையமாகக் கொண்ட இந்தப் படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது . இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான் நடிக்க உள்ளார் . இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக இயக்குனர் ஓம் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . இதனால் பிரபாஸ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் .