Categories
மாநில செய்திகள்

“டிஸ்சார்ஜ் ஆன இளவரசி”…. போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு சென்றார்…!!

விக்டோரியா மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த இளவரசி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இவருக்கு ஜனவரி 20 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவருக்கு கொரோனா  பூர்த்தி செய்யப்பட்டது. இதையடுத்து அதே அறையில் தங்கியிருந்த இளவரசிக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

அவருக்கும் கொரோனா உறுதியானதால் அவரும், விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வரும் 5-ஆம் தேதி அவர் விடுதலையாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |